தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை இலவச அறுவை சிகிச்சை முகாம்

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை இலவச அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது என டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை இலவச அறுவை சிகிச்சை முகாம்
X

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன்.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை கண், காது குறைபாடுகள், உதடு மற்றும் அன்னபிளவு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுமென டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை (24.9.2021- வெள்ளிக்கிழமை)காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இலவச அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கண், காது குறைபாடுகள், உதடு மற்றும் அன்னபிளவு குறைபாடுள்ள குழந்தைகளுக்காக இந்த இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாம்களில் பங்கேற்று பயனடையலாம் என்றார் அவர்.

Updated On: 23 Sep 2021 7:15 AM GMT

Related News