/* */

குடிநீர் திட்டம்: பாஜக தலைவரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு

தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மதுரை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினர் பா.ஜ. தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

குடிநீர் திட்டம்: பாஜக தலைவரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு
X

கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள், மதுரை வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என, தமிழக அரசை வலியுறுத்தக்கோரி, முல்லை சாரல் விவசாயிகள் சங்கத்தினர் பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்து முறையிட்டனர்.

முல்லை சாரல் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கொடியரசன், டாக்டர் சதீஷ் தலைமையிலான குழுவினர், மதுரை வந்த அண்ணாமலையை சந்தித்து, மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் எந்த தவறும் இல்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த வேண்டும்.

தற்போதய நிலையில், லோயர்கேம்ப்பில் தடுப்பணை கட்டி, குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல 1300 கோடி ரூபாய் செலவில் திட்டமிட்டுள்ளனர். இதனை விட குறைவான நிதியில் கால்வாய் மூலம், ஆறு மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு சென்றால், தேனி மாவட்ட நிலத்தடி நீர் மட்டமும், மதுரை மாவட்டத்தின் மேற்க பகுதியில் உள்ள நிலங்களின் நிலத்தடி நீர் மட்டமும் பாதுகாக்கப்படும்.

எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்திடும் வகையில், குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு, தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் எனக்கோரி, மனு கொடுத்தனர். இந்த திட்டம் குறித்து உரிய அதிகாரிகள், அரசு நிர்வாகத்துடன் பேசுவதாக அண்ணாமலை உறுதி அளித்ததாக, முல்லைச்சாரல் விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி