/* */

சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்க தடை

மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் சின்னசுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்க தடை
X

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எந்த நேரமும்பெரும் வெள்ளமாக மாறும் வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அருவிகளில் குளிக்க முழு அளவில் அனுமதி வழங்கப்படவில்லை. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் ஏராளமான கிராமங்களும் அமைந்துள்ளன. இவர்கள் இப்பகுதியில் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, இங்குள்ள சின்னசுருளி அருவிக்கு வெளிப்பகுதி மக்கள் வராவிட்டாலும், இங்குள்ள கிராம மக்கள் சென்று குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது மேகமலையில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் மழை தொடர்வதால் எந்த நேரமும் சின்னசுருளி அருவியில் பெரும் வெள்ளம் வரும் வாய்ப்புகள் உள்ளதால், மலைக்கிராம மக்கள் கூட சின்னசுருளி அருவியில் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் மலைக்கிராம மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். யாரும் குளிக்க செல்லாத வகையில் அங்கு பாதுகாப்பிற்கு வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்