ஆண்டிபட்டியில் ஜனநாயக கடமையாற்றிய வேட்பாளர்கள்
ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர்.
HIGHLIGHTS



தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் இன்று காலை 7மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்கினை சொந்த ஊர்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் செலுத்தி ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மகாராஜன் தனது வாக்கினை ஆண்டிபட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பதிவு செய்தார். அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தனது சொந்த ஊரான முத்தனம் பட்டியில் உள்ள அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் பதிவுசெய்தார்.
இதேபோன்று அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் தனது சொந்த ஊரான அரப்படித்தேவன் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.