ஆண்டிபட்டி யூனியன் கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் கவுன்சில் கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆண்டிபட்டி யூனியன் கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி தி.மு.க கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது .

ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் லோகிராஜன் (அ.தி.மு.க) தலைமையில் நடந்தது. ஒன்றிய கவுன்சிலில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பதினோரு பேர், அ.ம.மு.க.வில் ஒருவர், காங்கிரஸ் ஒருவர், தி.மு.க.வில் ஐந்து உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று கூடிய கவுன்சில் கூட்டத்தில் தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதன், பி.டி.ஓ-க்கள் திருப்பதி, போஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி, தி.மு.க கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். அதிகாரிகள் ஒரு மணி நேரம் சமரச பேச்சு நடத்திய பின்னர், தர்ணா முடிவுக்கு வந்தது. கவுன்சில் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Updated On: 23 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம்
 2. ஈரோடு
  பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில், சிறப்பு இருதய பரிசோதனை முகாம்: எம்.எல்.ஏ எழிலரசன்...
 4. காஞ்சிபுரம்
  ஸ்கேட்டிங் மூலம் பரதக்கலை விழிப்புணர்வு: காஞ்சிபுரம் மாணவி...
 5. தமிழ்நாடு
  தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
 6. விளையாட்டு
  ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
 9. காஞ்சிபுரம்
  அ.தி.மு.க பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் வரனும்: காஞ்சியில் தமிழ்மகன்...
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.5.50