Begin typing your search above and press return to search.
தேனியில் கைதி தப்பி ஓட்டம்: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
தேனியில் தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS

தேனி சிறையில் அடைக்க கொண்டு வரும் போது தப்பி ஓடிய கைதி கணேஷ்முண்டா.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்முண்டா, 25. இவர் மதுரை கூடல் நகரில் ஒரு ஓட்டலில் வேலை செய்தார். மோசடி வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உசிலம்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் தேனி மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தல்லாகுளம் போலீஸ் ஏட்டுகள் கணேசன், செந்தில் ஆகியோர் நேற்று மதுரை மாஜிஸ்திரேட் 2வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரது காவல் அக்., 26ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதனால் தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். சிறைக்கு அருகில் சமத்துவபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது கணேஷ்முன்டா தப்பி ஓடி விட்டார். தனிப்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.