/* */

எம்.ஜி.ஆருக்கே அல்வா? நெஞ்சம் நெகிழ வைத்த நேர்மை

தனக்கு அல்வா கொடுத்த ரசிகரை சிக்கலில் மாட்டி விடாமல் பணம் கொடுத்து காப்பாற்றினார் எம்.ஜி.ஆர்.

HIGHLIGHTS

எம்.ஜி.ஆருக்கே அல்வா? நெஞ்சம் நெகிழ வைத்த நேர்மை
X

பைல் படம்

மனதில் நின்ற மனிதர்கள் என்ற தொடரில் நடிகர் ராஜேஷ் எழுதிய ஒரு சுவாராஸ்யமான விஷயத்தை எங்கள் வாசகர்களுக்கு அப்படியே வழங்குகிறோம்.

ஒரு நாள் அண்ணன் நடிகர் திலகத்திடம் எம்.ஜி.ஆரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்? என்று கேட்டேன். இந்த கேள்வியைக் கேட்டவுடன் சிவாஜி அண்ணனின் முகம் மலர்ச்சி அடைந்தது. உடனே அவர் 1943-ஆம் ஆண்டு ராமச்சந்திரன் அண்ணனை யானை கவுனியில் தான் சந்தித்தேன். அப்போது அவர் குடும்பம் யானைக்கவுனியில் தான் இருந்தது. அப்பொழுது நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ராமச்சந்திரன் அண்ணணுடன் கேரம்போர்டு விளையாடுவோம். பல மாலை வேளைகளில் அண்ணன் எங்களையெல்லாம் மும்பை சேட்டுக்கடைக்கு அழைத்துச் செல்வார். அங்கு பூரிக்கிழங்கு மசாலா பால் எல்லாம் வாங்கித் தருவார்.

அவர்தான் காசு கொடுப்பார். அப்போது அவர் மட்டும் தான் அப்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் எங்கள் இருவருக்கும் பழக்கமான சில நாடக நடிகர்கள் தினமும் ராமச்சந்திரன் அண்ணன் தான் காசு கொடுக்கிறார். இன்று நமது காசில் அவருக்கு டிபன் வாங்கிக் கொடுப்போம் என்று முடிவு செய்து ராமச்சந்திரண் அண்ணனை வேறு ஒரு ஓட்டலுக்கு பந்தாவாக அழைத்தார்கள். அப்போது ராமச்சந்திரன் அண்ணன் கணேசா! நீ எங்கேயும் போயிடாதே! நீயும் என்னுடன் வா என்று என்னையும் அழைத்துச் சென்றார். அந்த ஓட்டலில் சப்ளையர் வேலை செய்யும் சிலர் நாடகம் சினிமா பார்க்கும் மோகம் உடையவர்கள் சினிமா ரசிகர்கள்.

அவர்களுக்கு சிவாஜி, எம்.ஜி.ஆரை மிகவும் பிடிக்கும். எங்களை அழைத்துச் சென்ற நாடக நடிகர்கள் சப்ளையர்களுக்கு பாஸ்கள் கொடுத்து நாடகம் பார்க்கச் செய்வது வழக்கம். இதற்கு கைமாறாக அந்த நடிகர்கள் சாப்பிட வரும் போதெல்லாம் முதலாளிக்கும் மற்ற சப்ளையர்களுக்கும் தெரியாமல் அல்வாவாவை இரண்டு பூரிக்கு நடுவில் வைத்து உருளைகிழங்கையையும் சேர்த்து அமெரிக்க உளவுத்துறையாலும் கண்டுபிடிக்க முடியாதபடி தட்டில் வைத்து கொடுப்பது உண்டு.

அன்றைக்கு அந்த நாடக நடிகர்களோடு சென்ற எம்.ஜி.ஆர்க்கும் எனக்கும் கூட அதே போல் கொண்டு வந்து வைத்தார் ஒரு சர்வர். எம்.ஜி.ஆர். முதலில் பூரிக்கிழங்கை பிரித்துப் பார்க்கும் போது அல்வா இருந்ததைக் கண்டு! ஏம்பா சர்வர் நான் பூரிக்கிழங்கு மட்டும் தானே கேட்டேன்! நீ அல்வாவையும் வைத்து விட்டாயே?என்றார். அப்படி கேட்டவுடன் எம் ஜி.ஆரையும் என்னையும் அழைத்துச்சென்ற நாடக நடிகர்களைப் பார்த்து அந்த சர்வர் திருதிருவென்றே முழித்தார்.

உடனே அந்த நடிகர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் ரகசியமாக அண்ணே இந்த அல்வாவின் விலை பில்லில் சேராது. இது சப்ளையர்களுக்கு நாடகம் பார்க்க இலவசமாக நாங்கள் பாஸ் கொடுப்பதால் கைமாறாக செய்யும் ஒரு விசயம் என்றார். அதைக் கேட்டவுடன் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்! என்னிடம் கணேசா உன்னுடைய பூரிக்குள்ளும் அல்வா இருக்கிறதா? பார் என்றார். நானும் பார்த்து விட்டு ஆமாண்ணே இருக்கிறது என்றேன். உடனே சர்வரைப் பார்த்து மரியாதையாக எல்லா அல்வாவையும் எடுத்து விடு! இல்லையென்றால் முதலாளியிடம் சொல்லிவிடுவேன் என்றார்.

அதற்குள் சில நடிகர்கள் அல்வாவை தின்று விட்டார்கள். சர்வரோ கண்கலங்கி முதலாளியிடம் சொல்லி விடாதீர்கள்! என் வேலை போய்விடும் என்று கெஞ்சினார். அப்படி என்றால் நான் தான் இன்றைக்கு எல்லோருடைய பில்லுக்கும் காசு கொடுப்பேன் என்றார் எம்.ஜி.ஆர். உடனே நாடக நடிகர்களில் ஒருவர் அண்ணே நாங்கள் தான் உங்களை அழைத்து வந்தோம்! பூரிக்கிழங்குக்கு நாங்கள் கொடுக்கிறோம் நீங்கள் அல்வாவிற்க்கு வேண்டுமானால் காசு கொடுங்கள் என்று ஒருவாராக பேசி முடிவுக்கு வந்தார்கள். அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., அல்வாவிற்கு பணம் கொடுத்தார். பணம் கொடுத்த பின்னர் இது மாதிரி தவறுகளை இனி எக்காலத்திலும் செய்யாதீர்கள் என அன்புடன் அறிவுறுத்தினார். எம்.ஜி.ஆரின் நெஞ்சம் நெகிழவைத்த நேர்மையை கண்டு அத்தனை பேரும் சற்று கலங்கி விட்டனர். இவ்வாறு எழுதியுள்ளார்.

Updated On: 6 May 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!