/* */

இப்படியும் ஒரு உலக சாதனை; 'அதிசயம், அற்புதம்' என மனிதர்களை வியக்க வைத்த ஒரு பறவை

உலக சாதனையை ஒரு பறவை முறியடித்துள்ள செய்தி தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

HIGHLIGHTS

இப்படியும் ஒரு உலக சாதனை; அதிசயம், அற்புதம் என மனிதர்களை வியக்க வைத்த ஒரு பறவை
X

உலக சாதனை படைத்த டெயில் காட்விட் பறவை.

பொதுவாக நாம் பல சாதனைப்படைத்த மனிதர்களையும் ஜாம்பவான்களையும் பார்த்திருக்கிறோம். இந்த வரிசையில் சாதனையை முறியடித்து பறவை ஒன்றும் இடம் பிடித்துள்ளது.

ஆம், அந்த பறவை தான் பார்-டெயில் காட்விட் பறவை.

காட்விட் பறவையின் உடல் அமைப்பானது போர் ஜெட் விமானம் போல தோற்றமளிக்கும். இதன் இறக்கை மிகவும் கூர்மையாக இருக்கும். இந்த பறவைகள் கோடைக்காலத்தில் ஆர்டிக் பகுதியில் இருக்கிறது. அங்குள்ள மீன்கள், புழுக்களை உண்டு வாழும். இதன் உடலில் பெரும்பகுதி கொழுப்பாகவே இருக்கும் நீண்ட தூரம் பறப்பதற்கு ஏற்றவாறு இந்த பறவையின் உடல் அமைப்பு இருக்கிறது. இப்பறவைகள் தண்ணீரில் இறங்கினால் இறந்து விடும், அதன் காலில் வலை போன்ற அமைப்பு இல்லை, அதனால் இறங்க வழியே இல்லை. அதனால் சோர்வு அல்லது மோசமான வானிலை காரணமாக கடலின் மேற்பரப்பில் விழுந்தாலோ, தரையிறங்கினாலோ அதுவே அப்பறவையின் கடைசி நிமிடமாக பார்க்கப்படுகிறது.

சாதனையை முறியடித்த பறவை

பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் அதாவது 13,500 கிலோ மீட்டர், இடைவிடாமல் பறந்துள்ளது. ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம் பெயர்வுக்கான முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.

இப்பறவையின் 11 நாட்கள் செயற்கைக்கோள் டேக் மூலம் இது கண்காணிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைகளின் படி, "234684" என்ற டேக் எண் மூலம் அறியப்படும் பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் (8,435 மைல்கள்) உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் பறந்து சாதனையை முறியடித்தது.

முன்னதாக 2007 ம் ஆண்டில் இதே இனத்தை சேர்ந்த பெண் பறவை ஒன்று 11,680 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாது பறந்து சாதனைப்படைத்திருந்தது.

அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இதனை அறிந்த மக்கள், 'இப்படியும் ஒரு பறவையா' என வியப்பில் இருந்து மீளாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

(நம்மாளுங்க காலையில் அரை மணி நேரம் வாக்கிங் போனாலே .. எத்தனை அலும்பு பண்றாங்க....யப்பப்பா..)

Updated On: 8 Jan 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்