/* */

20% இட ஒதுக்கீடு - பாமகவினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி மாநில துணை பொதுச்செயலாளர் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

20% இட ஒதுக்கீடு -   பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமகவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முனட தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனியில் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக நின்ற பாமகவினர், வன்னியர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.‌ இதையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்‌.

Updated On: 29 Jan 2021 6:05 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?