Begin typing your search above and press return to search.
கேஸ் சிலிண்டர்களில் 100% வாக்குப்பதிவு ஸ்டிக்கர்
தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கேஸ் சிலிண்டரில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டிய கலெக்டர்.
HIGHLIGHTS

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றன. மேலும் வாக்காளிப்பதன் அவசியத்தையும், உரிமையையும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கேஸ் சிலிண்டரில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
தேனி திட்டசாலையில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி குடோனில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இன்று இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.