/* */

ஜல்லிக்கட்டில் 600 காளைகள் - 300மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி

சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் 600காளைகள், 300மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டில் 600 காளைகள் - 300மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி
X

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் உள்ள ஸ்ரீஏழைகாத்தம்மன், ஸ்ரீவல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்த விழாக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, உள்ளாட்சி, காவல், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, பொதுப்பணி, தீயணைப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர்களுடனான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கணகாணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி மற்றும் அய்யம்பட்டி கோவில் விழாக்குழுவினர் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த உள்ள அமைப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குழுவினரிடம் எழுத்து பூர்வமான அனுமதியும், போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் நபர்களுக்கு அனுமதியும் பெற்றிட வேண்டும். குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

இதில் 600காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு காலை 8மணி முதல் மாலை 4மணி வரை நடத்திடவும், ஒவ்வொரு 75 நிமிடத்திற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர். போதை மருந்துகள் மற்றும் வெறியூட்டும் பொருட்களை எவ்வடிவத்திலும் தரக்கூடாது. இதனை கால்நடை மருத்துவர்கள் நிக்கோட்டின் சோதனை, கோகைன் சோதனை மற்றும் இதர சோதனைகள் மூலம் உறுதி செய்திட வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள பகுதியில் கண்டறியப்பட்டுள்ள 38 கிணறுகளை சுற்றி பாதுகாப்பு வளையங்கள் அமைத்து, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு, அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரிவர கடைபிடித்து நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவினை சிறப்பாக நடத்திட மாவட்ட நிர்வாகத்துடன் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Updated On: 3 Feb 2021 5:02 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  2. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  3. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  5. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்