ஏடிஎம்-ல் உதவுவது போல் நடித்து மோசடி- பெண் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஏடிஎம்-ல் உதவுவது போல் நடித்து மோசடி- பெண் கைது
X

தேனியில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த ஜவுளிக்கடை மேலாளரிடம் மோசடி செய்த பட்டதாரி இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (45). இவர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஜவுளிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜனவரி 25ம் தேதி வழக்கம் போல கடையின் வரவு செலவிற்காக தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.

வங்கியில் அதிக கூட்டம் இருந்ததால் வெளியே இருந்த பணம் செலுத்தும் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளம்பெண் ஒருவர், பணம் செலுத்துவதற்கு தான் உதவி செய்வதாக நாகராஜிடம் கூறி ரசீது வராத இயந்திரத்தில் ரூ. 50 ஆயிரம் பணத்தை போட்டுள்ளார். அதில் ஒரு 500 ரூபாய் தாளை மட்டும் இயந்திரம் எடுத்துக் கொள்ளாததால் மீதமிருந்த ரூ 49,500 மட்டும் கணக்கில் செலுத்தப்பட்டதாக அந்த இளம்பெண் நாகராஜிடம் கூறியுள்ளார்.இதையடுத்து ஐநூறு ரூபாயை பெற்றுக் கொண்டு வந்த நாகராஜ், ஜவுளிக்கடை நிறுவனத்தின் வங்கிக் கணக்கை சரி பார்க்கையில் ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தப்பட்ட தொகை வரவு ஆகாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகத்திடம் கேட்கையில், சம்பவத்தன்று பணம் ஏதும் ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலாக பெறப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேலாளர் நாகராஜ், தேனி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. இதில் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நாகராஜ் கொடுத்த பணத்தை இயந்திரத்தில் செலுத்துவது போல நடித்து, அவர் சென்றதும் பணத்தை இளம்பெண் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் மனைவி மணிமேகலை (23) என்பவர் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டு பிடித்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து பணம் ரூபாய் 49,500 கைப்பற்றப்பட்டது. கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியே வசித்து வரும் மணிமேகலை இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி ஆவார். இதேபோன்று விருதுநகர் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்துபவர்களுக்கு உதவுவது போல நடித்து மோசடி செய்ததாக காவல்துறையினரால் மணிமேகலை கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும் தற்போது போடி பகுதியில் இருந்தும் சிலர் இதுபோன்று தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், வழக்குப்பதிந்து மணிமேகலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Updated On: 2021-02-04T11:15:57+05:30

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
  4. நாமக்கல்
    சொன்னபடி தார்ரோடு போட்டுத்தந்த எம்எல்ஏ : அய்யம்பாளையம் மக்கள் நன்றி
  5. திருப்பூர் மாநகர்
    கோவில் நிலம் மீட்கக்கோரி திருப்பூரில் இந்து முன்னணியினர் போராட்டம்
  6. மதுரை மாநகர்
    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
  7. சைதாப்பேட்டை
    சென்னையில் டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 'காப்பு'
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு
  9. திருவெறும்பூர்
    திருச்சி அருகே ஊராட்சி தலைவருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம்
  10. மதுரை
    மதுரை மாவட்டம் பகுதியில் பெருகும் கொரோனா தொற்று