/* */

சம்பள பணத்தை மாணவர்களுக்கு உதவிதொகையாக வழங்கினார் எம்.எல்.ஏ. இனிகோ

தனது சம்பள பணத்தை மாணவர்களுக்கு உதவிதொகையாக வழங்கினார் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.

HIGHLIGHTS

சம்பள பணத்தை மாணவர்களுக்கு உதவிதொகையாக வழங்கினார் எம்.எல்.ஏ. இனிகோ
X

தனது சம்பள பணத்தை ஒரு மாணவனுக்கு கல்வி உதவி தொகையாக இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக திகழ்ந்து வருகிறார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் அவர் மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள தீர்க்கப்படாத 10 கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க உத்தரவிட்டபோது தமிழகத்திலேயே முதன் முதலாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தனது கோரிக்கை மனுவை அளித்து தொகுதி மக்களின் பாராட்டை பெற்றார்.


மேலும் இனிகோ இருதயராஜ் சட்டமன்ற உறுப்பினருக்கான தனது சம்பள பணம் முழுவதையும் தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகயைாக பகிர்ந்தளித்து வருகிறார். அதன்படி நேற்று தனது சட்டமன்ற அலுவலகத்தில் தனது சம்பளப் பணம் சுமார் ரூ. 6லட்சத்தை உதவி கேட்ட அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்தளித்தார்.

இந்த நிகழ்வின்போது தி.மு.க .மாநகர செயலாளரும் 3-வது மண்டல குழு தலைவருமான மு. மதிவாணன், 2-வது மண்டல குழு தலைவர் பி.ஜெய நிர்மலா, வட்டக் கழக செயலாளர்கள். சிவகுமார்,ஜெயச்சந்திரன்,எம்.ஐ.டி. சாகுல் அமீது, மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Updated On: 12 Sep 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  6. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  8. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...