/* */

மதுக்கூர் வட்டாரத்தில் காப்பீடு குறித்து கிராமம் கிராமமாக முனைப்பு இயக்கம்

Crop Insurance Scheme -மதுக்கூர் வட்டார விவசாயிகள் சம்பா நெற்பயிரை வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

HIGHLIGHTS

மதுக்கூர் வட்டாரத்தில் காப்பீடு குறித்து கிராமம் கிராமமாக முனைப்பு இயக்கம்
X

பயிர் காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க கிராமம் கிராமமாக வேளாண் துறை மூலம் முனைப்பு இயக்கம் நடைபெற்றது.

Crop Insurance Scheme -மதுக்கூர் வட்டார விவசாயிகள் சம்பா நெற்பயிரை வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கூறுகையில், பயிர்காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அடங்கிய அலுவலர்கள் குழு கிராமம் கிராமமாக முனைப்பு இயக்கம் நடத்துகிறது.

நடப்பு சம்பா பருவத்தில் மதுக்கூர் வட்டாரத்தில் இந்நாள் வரை 3500 எக்டர் சம்பா நடவு முடிந்துள்ளது. தாளடி நடவு 300 எக்டருக்கு மேல் முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் முடிய குறுவை அறுவடை முடிந்த விவசாயிகள் தாளடி நாற்றங்காலில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளும் தயார் நிலையில் வைத்து உள்ளனர்.

மதுக்கூர் வட்டாரத்தை பொறுத்தவரை நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள் தாளடி நடவும் முடிவு பெற்றுவிடும். எனவே அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15க்குள் விதைப்பு செய்த அல்லது நடவு செய்த மைக்கான சிட்டா அடங்கள், ஆதார் நகல் மற்றும் பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்துடன் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 539 வீதம் பிரிமியம் செலுத்தி நவம்பர் 10ம் தேதிக்குள் பொது சேவை மையத்திலோ தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலோ அரசு வங்கிகளிலோ காப்பீட்டு பணியை செய்து முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காப்பீடு செய்யும் போது விவசாயிகள் காப்பீடு செய்தமைக்கான கணினி ரசீதினை அவசியம் பெற்றுக் கொள்ளவும் . கணினி ரசீதில் சாகுபடி செய்துள்ள கிராமம் அடங்கலில் உள்ள சர்வே எண்கள் அனைத்தும் விடுபாடு இன்றி பதிவு செய்யப்பட்டுள்ளதா; பரப்பு சரியாக பதியப்பட்டுள்ளதா என்பவற்றை உடனடியாக சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் வசிப்பிடத்தில் உள்ள கிராமம் ஆதார் நகல் அடிப்படையில் சாகுபடி கிராமமாக பதியப்பட்டு விடுகிறது.

இந்நிலையில் அந்த சர்வே எண்கள் குறிப்பிட்ட கிராமத்தில் இல்லாத பட்சத்தில் கூடுதலாக சாகுபடி பரப்புக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதாக ஆய்வுக்குப் பின் தள்ளுபடி செய்திட வாய்ப்புள்ளது. இப்போது விவசாயிகள் அனைவரும் மூன்றாண்டுக்கு மேலாக இன்சூரன்ஸ் செய்து வருவதால் இத்தகைய தவறுகளை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. வங்கி கணக்கு எண் தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தால் கூட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையானது வரவு வைக்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் தங்களுடைய சாகுபடி கிராமமும் அடங்களில் உள்ள சர்வே எண்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறுகள் இருப்பின் உடனடியாக பிரீமியம் செலுத்திய இடத்தில் தெரிவித்து தவறுகளை சரி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் சம்பா சாகுபடிக்காகநகை கடன் பெறும்போது வழங்கும் சர்வே எண்ணை பொது சேவை மையத்திலும் வழங்கி இருமுறை பிரிமியர் தொகை செலுத்தப்படும் தவறுகளும் நிகழ்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகளின் ப்ரீமிய பங்குத் தொகையும் கூடுதலாக வரவுவைக்கப்படும் இதனால் தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது. நமது சம்பா சாகுபடி பிரீமியம் கட்டும் பட்டியலில் நெல் 2 (ராபி) என்றால் சம்பா பருவத்தை குறிக்கிறது.

கடந்த வருடம் சில விவசாயிகள் தவறுதலாக நெல் 3 என்ற தலைப்பில் கோடை நெல் சாகுபடியின் கீழ் சம்பா நெல்லினை காப்பீடு செய்திருந்தனர் அத்தகு தவறுகளும் மீள சரி செய்யப்பட்டது. மதுக்கூர் வட்டாரத்தை பொறுத்தவரை கடந்த வருடம் போல் அக்டோபர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இல்லை. ஆனால் வானிலை மைய ஆய்வுப்படி நவம்பர் மாதத்தில் அதிக மழையானது எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் இயற்கை சீற்றங்களில் இருந்து நமது பயிரை காத்துக் கொள்ளவும் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இயன்றவரை நவம்பர் பத்துக்குள் காப்பீட்டு பணிகளை முடித்துக் கொள்ளவும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகள் தாங்கள் பிரீமியம் செலுத்திய கணினி ரசீதினை பெற்று சரி பார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பயிர் காப்பீடு செய்திட ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ் மற்றும் மதுக்கூர் வட்டார ரிலையன்ஸ் அலுவலர் மணி அட்மாத்திட்ட அலுவலர் ராஜுஆகியோர் அடங்கிய குழுவினர், இதுவரை 26 கிராமங்களில் விவசாயிகள் கூடும் இடங்களில் நேரடியாக சந்தித்து விவசாயிகளுக்கு தேவையான கைப்பிரதிகளை வழங்கியதோடு ஆங்காங்கே விழிப்புணர்வு பணியும் மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு பணியின் போது விவசாயிகள் கடந்த வருடம் கட்டிய பிரிமியத்திற்கு இழப்பீடு தொகை கிடைக்கப்பெறவில்லை என கேட்டுக்கொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் கடந்த மூன்று வருடங்களில் நமது வட்டாரத்தில் அந்தந்த கிராமங்களில் கிடைக்கப் பெற்ற சராசரி உத்தரவாத மகசூலை விட கடந்த வருட மகசூல் கூடுதலாக இருந்ததால் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

காப்பீடு தொடர்பாக வேறு ஏதேனும் தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்