உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சி களிலும் சிறப்பு கிராம கூட்டம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்:  தஞ்சை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
X

தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி ஊராட்சியில் உலக கதண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி ஊராட்சியில் இன்று (22.03.2023) உல கதண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் கலந்து கொண்டார்.

பின்னர் மாவட்டஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க உலக தண்ணீர் நாளை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக புதன்கிழமை தஞ்சாவூர் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் மருதகுடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும். உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்தும், கிராம ஊராட்சி யின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.

ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்குநாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவிஎண்,விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதித்து பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செ. இலக்கியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செ. இலக்கியா,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.உதயன், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜகோபால், மருதகுடி ஊராட்சி மன்ற தலைவர் அம்மாசெல்லம், தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.பிரபாகரன், மதியரசன்,பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2023 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  2. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  4. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  6. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்
  7. திருப்பூர் மாநகர்
    ‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை’ - ‘மாஜி’ அமைச்சர் வேலுமணி...
  8. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  9. திருவண்ணாமலை
    சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
  10. திருவண்ணாமலை
    கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்