/* */

வாணி்யம்பாடி கொலை வழக்கு: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

கொலையாளிகள் 6 பேர் இண்டிகா காரில் வந்து, வசீம் அக்ரமை கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரிய வந்தது

HIGHLIGHTS

வாணி்யம்பாடி கொலை வழக்கு:  தஞ்சாவூர் நீதிமன்றத்தில்  6 பேர்  சரண்
X

வாணியம்பாடியில் கொலைசெய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேர்

வாணியம்பாடி மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேரையும் வருகிற 20 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி சேர்ந்தவர் வசீம் அக்ரம்(40). சமூக ஆர்வலரான இவர், மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு ஜீவா நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கத்தி, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையும், கொலை நடந்த போது அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு நடத்தினர். அதில் கொலை நடந்த காட்சிகள் தெளிவாக இருந்தது. கொலையாளிகள் 6 பேர் இண்டிகா காரில் வந்து, வசீம் அக்ரமை கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரிய வந்தது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பாலு செட்டி சத்திரம் அருகே உள்ள சோதனை சாவடியில் வந்த காரை, போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த்(23), தில்லிகுமார்(25), ஆகிய இருவர் சிக்கினர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தியாஷ் குறித்து, வசீம் அக்ரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் முன் விரோதம் இருந்தது. இதையொட்டி கொலை நடந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், வசீம் அக்ரம் கொலை வழக்கில் போலீசார் தேடப்பட்ட வந்த, காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஜான்தாஸ் மகன் அகஸ்டின்(19) , பாஸ்கர் மகன் சத்தியசீலன்(20 ), வண்டலுார், ஒட்டோரி விரிவாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரவீன்குமார்(20), நாகு மகன் முனீஸ்வரன்(20 ) மோகனசுந்தரம் மகன் செல்வக்குமார்(20), சென்னை, ஊரப்பாக்கம் எபினேசர் மகன் அஜய் (21 ) ஆகிய 6 பேரும், தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற (எண்.3) நீதிமன்றத்தில், நீதிபதி பாரதி முன்பாக, சரணடைந்தனர். இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டதால், 6பேரும் கும்பகோணம் கிளைச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Updated On: 14 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?