தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இன்று ஆறு மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது

தஞ்சை மாநகராட்சியில் இன்று 6 மையங்களில் 650 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இன்று ஆறு மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது
X

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று 05 மையங்களில் 650 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 நபர்களுக்குக்கும், அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணன் பள்ளயில் 100 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 150 நபர்களுக்கும், நடமாடும் வாகனம் மூலம் 100 நபர்களுக்கு என ஆறு மையங்களில் 650 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது.

மேலும் கோவாக்சின் கையிருப்பு இல்லாததால் எந்த மையங்களிலும் செலுத்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Sep 2021 2:15 AM GMT

Related News