/* */

தஞ்சை அருகே பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

கணவர் இறந்த துக்கம் தாளாமல் தனது 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

HIGHLIGHTS

தஞ்சை அருகே  பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
X

தாய் பூச்சி மருந்து கொடுத்ததால் உயிரிழந்த சிறுவர்கள்

கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளோடு விஷம் குடித்த தாய் சத்யா (30) தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது இரண்டு சிறுவர்கள் முகேஷ், வயது (7) நிதிஷ்,(5) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் தாய். சத்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தை விஜயகுமார், இவர் விவசாய கூலி தொழிலாளி வயது (32) இவருடைய மனைவி சத்யா, வயது (30) இவர்களுக்கு முகேஷ் (7)நித்திஷ் (5) இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் கணவர் விஜயகுமார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் . கணவர் இறந்த துயரத்தில் மன வேதனையில் இருந்த சத்யா, வயல்களில் தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, இவரது மகன் வீட்டில் இருந்து வெளியே வந்து வாந்தி எடுத்தபோது அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துபூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்ற தாய். சத்யா, கையில் வைத்து இருந்த மருந்து பாட்டிலை தட்டிவிட்டு மூன்று பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மகன்கள் முகேஷ் , நித்திஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர்களது தாய் சத்யா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Updated On: 10 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...