போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்: தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு

பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வு களுக்கு பயிற்சி வகுப்புகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது என ஆட்சியர் தகவல்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்: தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு
X

பைல் படம்

பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வு களுக்கு பயிற்சி வகுப்புகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 20.03.2022 அன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இத்தொலைக்காட்சி அலைவரிசையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

மேலும் இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment என்ற YouTube Channel -ல் அடுத்தடுத்த நாட்களில் காணலாம்.போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் அலை வரிசை ஏர்டெல் DTH- 821, சன் DTH-33 , TATA Sky DTH-1554, VIDEOCON d2h- 597, தனியார் கேபிள் (MSOs) TAC TV-200, TCCL-200.

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இப்பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை பார்த்து பயன்பெறலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-237037. தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 13 May 2022 10:00 AM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரையில் மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
 2. பாளையங்கோட்டை
  விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...
 3. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 4. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 5. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 6. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 7. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 8. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 9. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 10. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்