/* */

தஞ்சாவூர் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஜூலை 9 ல் தேர்தல்

Thanjavur Rural and Urban Local Bodies Elections on July 9

HIGHLIGHTS

தஞ்சாவூர்  ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஜூலை  9  ல் தேர்தல்
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முதல் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்; மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் (25.6.2022) நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்; மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022 முடிய பல்வேறு காரணங்களினால் ஏற்பட்ட காலி பதவியிடங்களுக்கு தேர்தல்கள் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வரப்பெற்றுள்ளது.

தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்பு மனுக்கள் பெறுதல்: 20-06-2022.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி : 27-06-2022.

வேட்பு மனுக்கள் ஆய்வு செய்தல் - 20.06.2022.

வேட்பு மனுக்களை திரும்பப்பெறுதல் - 30.06.2022.

வாக்குப்பதிவு நடைபெறும் நாள் - 09.06.2022.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - 02.07.2022.

தேர்தல் நடவடிக்கைகள் முடிவுபெறும் நாள் - 14.07.2022.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள்-15.07.2022. உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம் 2. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடம் 26. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் , தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 8 மற்றும் அய்யம்பேட்டை பேரூராட்சியில் வார்டு எண் 9 ஆகிய பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 32 வாக்குச்சாவடி மையங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5 வாக்குச்சாவடிமையங்களும் கூடுதலாக 37 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும். இத்தேர்தல்களில் 6704 ஆண் வாக்காளர்களும். 6986 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 13690 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 27.06.2022 அன்று முதல் முதல்நிலை ஆய்வு செய்யப்படவுள்ளது. இத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகள்முறையாக பின்பற்றப்பட்டு தேர்தல்களை 100 சதவீதம்சரியான முறையில் நடத்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Jun 2022 2:30 PM GMT

Related News