/* */

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்

பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கு மாணவர்கள் தேர்வு எழுத வாராதது வழக்கமான ஒன்று என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்
X

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனை நூலை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இந்த ஆண்டு மாணவ- மாணவிகள் 4 முதல் 5 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இது வழக்கமான ஒன்றுதான். கடந்த 2019ஆம் ஆண்டு 6 முதல் 7 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. அதாவது 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை.

மாணவ -மாணவிகள் தேர்வு எழுத பயப்படக்கூடாது. தைரியமாக இருந்து தேர்வு எழுத வேண்டும். மதிப்பெண் மட்டுமே உங்களை தீர்மானிப்பது அல்ல. நீங்கள் எடுக்கும் மதிப்புக்கு ஏற்றவாறு மேல்படிப்பு படித்து எந்தத் துறையில் வேலைக்கு சேர வேண்டுமோ அதில் சேருங்கள் என தெரிவித்தார். மேலும் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த முறை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டார். இந்த முறையும் அவர் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வருவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Updated On: 8 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...