தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

பக்தர்களின் வேண்டு கோளுக்கிணங்க சட்டப்பேரவையில் மகாசிவராத்திரி விழா நடைபெறுவதற்கு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
X

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரி விழா முன்னேற்பாடு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறைஅமைச்சர் பி.கே. சேகர்பாபு, அரசுதலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் இந்துசமயம் மற்றும் அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் இரா. கண்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பக்தர்களின் வேண்டு கோளுக்கிணங்க சட்டப்பேரவையில் மகாசிவராத்திரி விழா நடைபெறுவதற்கு அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் நேற்று தஞ்சாவூர் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரி விழா நடைபெறுவதற்கு பெரியகோயில் அருகில் மாநகராட்சி பெத்தண்ணகலையரங்கம், திலகர் திடல்,சத்தியா ஸ்டேடியம் ஆகிய இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பெரியகோயில் அருகில் உள்ள திலகர் திடலில் மாபெரும் சிவராத்திரிவிழா நடைபெறுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பாக மகா சிவராத்திரி விழா வெகுசிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் ஐந்து சிவாலயங்களில்; சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், கோவை பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோவிலில் மாபெரும் மகா சிவராத்திரிவிழா நடைபெறும் என்றும் இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க பட்டீஸ்வரம், ஸ்ரீஞானம்பிகாசமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 50 இலட்சம் மதிப்பில் மகிஷத்துடன் பீடத்தில் இணைந்துள்ள பஞ்சலோகத்திலான 8 கரங்களுடன் தங்கரத துர்க்கையின் தங்கரதத்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டார்.

பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலில் ரூ.8,40,000 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக யானை குளியல் தொட்டியினை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திறந்து வைத்து யானை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), க.அன்பழகன் (கும்பகோணம்), கூடுதல் ஆட்சியர் வருவாய் என்.ஓ.சுகபுத்ரா, மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன்(தஞ்சாவூர்), க.சரவணன் (கும்பகோணம்), மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி(தஞ்சாவூர்), சு.ப.தமிழழகன்(கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.க. முத்து, பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Jan 2023 5:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...