/* */

குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,500 நெல்மூட்டைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி குடோனில் பதுக்கி வைத்திருந்த, 1,500 நெல்மூட்டைகள் மற்றும் இரண்டாயிரம் சாக்குகள் கைப்பற்றப்பட்டன.

HIGHLIGHTS

தஞ்சாவூர் - ஆலக்குடி சாலையில், முனியம்பட்டி சாய்பாபா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வல்லத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்நிலையில் இந்த குடோனில் உரிமம் இல்லாமல் 1,500 நெல் மூட்டைகள், 2000 சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையில், மேலாளர் ராமமூர்த்தி, தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வல்லம் போலீசாரை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது, நெல் மூட்டைகள், சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு மேலவஸ்தாசாவடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 20 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!