/* */

'ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வு' -பள்ளிக்கல்வி துறை அமைச்சர்

‘ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வு’ நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

HIGHLIGHTS

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வு -பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
X

விழாவில் விவசாயி ஒருவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்று வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 8500 பயனாளிகளுக்கு 9 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மாபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வி திட்டத்தை பொறுத்தவரை தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர், 12 மாவட்டங்களில் மட்டும் மழையின் காரணமாக சற்று தடையாக உள்ளது. மழைக்கு பிறகு மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என சமூக வலைத்தளங்களில் வருவது தவறான தகவல், நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அல்லது ஊரடங்கு தளர்வு என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்பு முதல்வர் தான் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.

ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடைபெற உள்ளது. அது வரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு ஜனவரி, மார்ச் மாதங்களில் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 30 Nov 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்