/* */

மாநகராட்சி அனுமதியின்றி 40 ஆண்டுளாக செயல்பட்ட தனியார் உணவகத்துக்கு சீல் வைப்பு

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காத இடங்களை அதிகாரிகள் மீட்டெடுத்து வருகின்றனர்

HIGHLIGHTS

மாநகராட்சி அனுமதியின்றி 40 ஆண்டுளாக  செயல்பட்ட தனியார் உணவகத்துக்கு  சீல் வைப்பு
X

தஞ்சை மாநகராட்சியில் அனுமதியின்றி 40   ஆண்டுகளாக நடத்தி வந்த உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

மாநகராட்சியின் அனுமதியின்றி 40 ஆண்டு காலமாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 10 கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டப் பணிகளின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாநகராட்சி சொந்தமான பழைய வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் 100 ஆண்டு காலமாக மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், குத்தகை காலம் முடிந்தும், இடங்களை ஒப்படைக்காத இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் தினம் தினம் கையகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான பழைய பேருந்து நிலையம் அருகே 40 ஆண்டுகளாக உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட தேவர் உணவகத்திற்கு அதிகாரிகள் இன்று காலை பூட்டி சீல் வைத்தனர், மேலும், மின்சார இணைப்பையும் துண்டித்தனர். அருகில் உள்ள மேலும் 10 கடைகளுக்கும் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். வருகிற 28-ஆம் தேதிக்குள் கடையை காலி செய்யவில்லை என்றால், பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

Updated On: 22 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!