/* */

தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்டம் நிர்வாகம் காவல்துறை, அரசு போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

HIGHLIGHTS

தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தஞ்சாவூர் மாவட்டம் நிர்வாகம் தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கான சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகளை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டு பேசியதாவது :

சாலை பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும்,காவல் துறையினரும்,போக்குவரத்து துறையினரும் எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். தலைகவசம் அணியாமல் செல்வது, சாலையில் செல்போனில் பேசிக் கொண்டே செல்வது, மது போன்ற போதை வஸ்துகளை உபயோகித்து வாகனம் ஓட்டுவது,சீட் பெல்ட் அணியாமல் செல்வது, ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்வது, போன்றவற்றை தவிர்த்து, சாலை விதிகளை மதித்து நடப்போம்.

எதிர் காலத்தை நோக்கி செல்லும் இளம் வயதினர் சாலை விபத்துகளில் அதிகம் உயிர் இழக்கின்றனர். பள்ளி,கல்லூரி பருவத்தில் உள்ள இளம் வயதினரும் சாலை விதிகளை கடைப்பிடித்து நடந்து நம் எதிர்கால வாழ்க்கையும் நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் காப்பாற்ற சாலை விதிகளை மதிப்போம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரக போக்குவரத்து துணைஆணையர் எஸ். கருப்புசாமி, வட்டாரபோக்குவரத்து அலுவலர் கே. முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்;.

Updated On: 12 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  5. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  7. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்