/* */

சொத்து வரிகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணங்களை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

சொத்து வரிகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
X

தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டவர்கள் சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு பயன்பாட்டுக் கட்டணம் போன்றவற்றை உடனடியாக செலுத்த வேண்டும்.

வணிக நிறுவனங்கள் தொழில் வரி (Profession Tax), தொழில் உரிமம் (D&O License) மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட சேவை கட்டணம் போன்றவற்றையும் மாநகராட்சிக்கு உடனடியாக செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களால் செலுத்தப்படும் இந்த வரியினங்களைக் கொண்டே தஞ்சை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி, பொது சுகாதார வசதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் ரூ.43 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது.

முன்கள பணியாளராக பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ 1.50 கோடியும் வழங்க வேண்டியுள்ளது. சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரியினங்கள் ஒவ்வொரு அரையாண்டிற்கும், குடிநீர் கட்டணம் ஒவ்வொரு காலாண்டிற்கும், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு வரி செலுத்த வேண்டியவர்களது கடமையாகும் என அந்த அறிக்கையில் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2020-2021 /1& 2 ஆம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினங்கள், காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பயன்பாட்டுக் கட்டணம், தொழில் உரிம கட்டணங்களை இதுவரை செலுத்தாமல் இருப்பின் உடனடியாக அலுவலக வரிவசூல் மையம், முனிசிபல் காலனி வரிவசூல் மையம், கல்லுக்குளம வரிவசூல் மையம் ஆகிய இடங்களில் செலுத்திட வேண்டும்.

அல்லது மேற்படி வரியினங்களை இணையதளம் வழியாக செலுத்த விரும்பினால் https://tnurbanepay.tn.gov.in என்ற முகவரியில் செலுத்தலாம். மற்றும் தங்களுக்குச் சொந்தமான காலி மனைக்கு காலி மனை வரி விதிக்கப்படாமல் இருந்தாலும், கட்டிடங்களுக்கு சொத்து வரி, கடைகளுக்கு தொழில் வரி விதிக்கப்படாமல் இருந்தாலும் அல்லது தங்கள் இல்லத்திற்கு குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல் இருந்தால் உடனடியாக மாநகராட்சியை தொடர்பு கொண்டு வரிவிதிப்பு செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnurbanepay.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். சொத்து வரி விதிப்பு, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, கட்டிட அனுமதி, வரைபட அனுமதி வழங்குவதில் ஏதேனும் தாமதம் இருப்பின் மாநகராட்சி ஆணையரைல தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 July 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?