/* */

கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரிக்கை

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 11 இந்து அறநிலையஆலயங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரிக்கை
X

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்

கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க, தமிழ்நாடு அரசு உயர் மட்ட குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 11 இந்து அறநிலையத்துறை ஆலயங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வி.சு. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம், தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கோவில் மனை குடியிருப்பு சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ஏழுமலை நன்றி கூறினார் .

கூட்டத்தில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் மனைகளில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வருபவர்கள் கோவிலுக்குரிய இடத்தின் அடிமனைக்கு ஆண்டுதோறும் வரி செலுத்தி வந்துள்ளனர், மேலும் தண்ணீர் வரி, சொத்து வரி , மின் கட்டணம் முதற் கொண்டு செலுத்தி வருகின்றனர். இந் நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் குடியிருந்து வரும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றும், பூட்டி சீல் வைக்கும் அடாவடித் தனத்தையும் செய்து‌ அரசிற்கு அவப் பெயரை ஏற்படுத்துகின்றனர்.

கோவில் மனைகளில் பல்லாண்டுகளாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா வழங்க வேண்டி நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களை, இயக்கங்களை நடத்தி வந்துள்ளனர் . இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மக்கள் வசிக்கும் இடங்களை ஆக்கிரமித்தும், வீடுகளை விட்டு வெளியேற்றுவது , பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கை விட வேண்டும் தமிழ்நாடு முதல்வர், அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது நாள் வரை இப்பிரச்னைகளில் தீர்வு காணப்படவில்லை.

எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா கிடைக்க தமிழ்நாடு அரசு டிரிப்யூனல் அல்லது உயர் மட்ட குழு ஒன்றை அமைத்து, உண்மைகளை கண்டறிந்து அந்த மக்களுக்கு நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி, வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி இந்து அறநிலையத் துறை ஆலயங்கள் , கோவில்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழ்நாடு முழுவதும் கோவில் நுழைவாயில்கள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டு மெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Updated On: 25 March 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது