மீண்டும் மழை : குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.

மீண்டும் மழை பெய்து வருவதால் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மீண்டும் மழை : குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.
X

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.

விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குளம் போல் விளைநிலங்கள் காட்சியளிக்கின்றன.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத போது விளைநிலங்களில் தேங்கிய மழை நீர் வடிய தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு கன மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக அம்மாப்பேட்டை, அன்னப்பன்பேட்டை, திட்டை, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் வடிந்த விளைநிலங்களில், மீண்டும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

தற்போதுதான் மழை நீரை வடிய செய்து பயிர்களை காப்பாற்றவதற்கான பணிகளில் ஈடுபட்டோம். ஆனால் மீண்டும் மழை பெய்து, விளை நிலங்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது வரை ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், திருவையாறு, கல்லணை, செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On: 26 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
 4. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா