/* */

தமிழில் பெயர் வைத்திருக்கும் வணிக வளாகங்கள், குடியிருப்புகளுக்கு பரிசு

தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குப் பரிசு: ஆட்சியர் தகவல்

HIGHLIGHTS

தமிழில் பெயர் வைத்திருக்கும் வணிக வளாகங்கள், குடியிருப்புகளுக்கு பரிசு
X

பைல் படம்

தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குப் பரிசுமாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுகள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படவும், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.

இவ்வறிப்பினை செயல்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பட்டிகள், பற்றுச்சீட்டுகள். விலைப்புள்ளிகள். இரப்பர் முத்திரைகள் ஆகியவற்றைத் தமிழில் அச்சிட்டு பயன்படுத்தியும், நிறுவனப்பெயர்ப்பலகைகளைத் தமிழில் அமைத்தும் உள்ள 3 வணிக நிறுவனங்களை (Business Firms) தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூலமாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசுகள் வழங்கப்பெறும். தகுதியுடைய வணிக நிறுவனத்தினர் இதற்கான படிவத்தினை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தி லிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தமிழில் பெயர் சூட்டியுள்ள குடியிருப்பு அடுக்ககங்கள் (Residential Apartments). வணிக வளாகங்கள் (Shopping Complex) ஆகியவற்றில் 3 குடியிருப்பு அடுக்ககங்கள். 3 வணிக வளாகங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அலுவலர்கள் மூலமாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசுகள் வழங்கப்பெறும். இதற்கான படிவம் மற்றும் விதிமுறைகளை உள்ளாட்சி உயர் அலுவலகம் (மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம்) பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04362- 271530) தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Aug 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு