/* */

மக்கள் நேர்காணல் முகாம்: 200 பேருக்கு ரூ 70 லட்சத்தில் நலத்திட்ட உதவி

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பெறப்பட்ட 435 மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

HIGHLIGHTS

மக்கள் நேர்காணல் முகாம்: 200 பேருக்கு ரூ 70 லட்சத்தில் நலத்திட்ட உதவி
X

 திருலோகி ஊராட்சி மாரியம்மன் கோவிலில்மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னிலையில் மக்கள் நேர்காணல் முகாம்  நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றமக்கள் நேர்காணல் முகாமில் 200பயனாளிகளுக்குரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோகி ஊராட்சி மாரியம்மன் கோவிலில் “மக்கள் நேர்காணல் முகாம்”மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக் கிணங்க பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வுகாணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒ ருஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் சரசம், திருலோகிஊராட்சிமாரியம்மன் கோவிலில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டா மாற்றம். கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய435பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,வருவாய் துறைசார்பில் 91பயனாளிகளுக்குரூபாய் 56,61,000 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, சமூகபாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 59பயனாளிகளுக்குரூபாய் 12,31,000; மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 10பயனாளிகளுக்கு ரூபாய் 4,052மதிப்பிலான அனைத்து விவசாய பயன்பாட்டு பொருட்களும், தோட்டக்கலைமற்றும் மலைப்பயிர்கள் துறைசார்பில் 2பயனாளிகளுக்கு ரூபாய் 7,350மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 1,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைசார்பில் 1 பயனாளிக்கு ரூபாய் 9,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் சுகாதாரத்துறை சார்பில் 22 பயனாளி களுக்கு ரூபாய் 35,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், முதலமைச்சரின் மருத்துவகாப்பீடு துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீடு அட்டையினையும் எனமொத்தம் 200பயனாளி களுக்கு ரூபாய் 70,73,002மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலனைமனதில் கொண்டு நான் முதல்வன், காலை உணவுதிட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிகல்வி,உங்கள் தொகுதியில் முதலமைச்சர்,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்தை உறுதி செய், மக்களைத் தேடிமருத்துவம் போன்றபல்வேறுதிட்டங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனமாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில்; மாவட்டவருவாய் அலுவலர் தெ.தியாகராஜன்,கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் செ.பூர்ணிமா, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) தவவளவன், மாவட்டஊராட்சி துணைத் தலைவர் சு.க.முத்துசெல்வம், திருப்பனந்தாள் ஊராட்சிஒன்றிய பெருந்தலைவர் தேவிரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.க.அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர் இளவரசிசின்னசாமி, திருலோகி ஊராட்சி மன்ற தலைவர்.க.ரமேஷ், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Aug 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்