தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பனை மற்றும் காதி கிராப்ட் விற்பனை அங்காடியை ஆட்சியர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு
X

 கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில்அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை மாவட்டஆட்சித்தலைவர்  தீபக் ஜேக்கப் 

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் - கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில்அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கதர்கிராம பொருட்கள் மற்றும் பனைப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும். மக்களிடையே பனைப்பொருட்களைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக விழுப்புரம்,திருவண்ணாமலை. நாகப்பட்டிணம், இராணிப்பேட்டை. வேலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை தொடங்கப்படும் எனஅறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பனைப்பொருட்கள் மற்றும் காதி கிராப்ட் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழச்சாறு, சுக்குகாபி, பனை ஓலைப் பொருட்கள்,சுக்கு காபித் தூள், பனங்கிழங்கு,பொடி, பதநீர். பனங்கருப்பட்டி,கதர் பொருட்கள், காதி சோப்பு, வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களைக் கொண்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக இவ்வங்காடி விற்பனைக்காக துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்திஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்றார் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கி.ரங்கராஜன், தஞ்சாவூர் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் வே.ப்ரான்ஸீஸ், தெரஸா மேரி, மேலாளர் சாவித்திரி, பனைப்பொருள் பெருவளத்திட்டம் திட்டஅலுவலர் த.மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jun 2023 6:15 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  சத்தியம், சிவம், சுந்தரம்! ராகுல்காந்தி சிறப்பு கட்டுரை..!
 2. இந்தியா
  சுத்தமா? கிலோ எவ்வளவு? : 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த மகாராஷ்டிரா...
 3. லைஃப்ஸ்டைல்
  health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
 4. சோழவந்தான்
  கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
 5. ஆன்மீகம்
  nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
 6. தமிழ்நாடு
  மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
 7. இந்தியா
  மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
 8. இந்தியா
  சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
 9. தமிழ்நாடு
  இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...
 10. இந்தியா
  இந்திய மாணவா்களுக்கு குறைந்த விலையில் மடிக்கணினி