/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழுஆய்வு

Thanjavur News Today -விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட விற்பனை நிலையங்களில் 17.95 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில்  விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழுஆய்வு
X

பைல் படம்

Thanjavur News Today -தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககசான்று துறை இயக்குனர் அவர்களது உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் கே.பி.முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பா பருவ நெல் விதைகளின் இருப்பு மற்றும் வினியோகம் குறித்த திடீர்ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான வரப்பெற்ற நெல் விதைகள், அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதை தஞ்சாவூர், கும்பகோணம், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட விதை உரிமங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் என ஆய்வு மேற்கொண்டனர்.விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீது, விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து, சம்பா பருவத்தில் நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான நீண்ட கால வயதுடைய விதைகள் ஆன சி.ஆர்.1009, சி.ஆர் 1009 சப் 1, கோ 43 மற்றும் மத்திய கால ரகங்களான ஏடிடீ 39, ஏடிடீ 46, ஏடிடீ 42 மற்றும் தாளடி பருவ ரகங்களான ஏடிடீ 37, ஏடிடீ 45, கோ 51, டிபிஎஸ் 5, ஏஸ்டி 16 போன்றவற்றை விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து விதை ஆய்வகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விதை விற்பனையாளர்கள், நெல் விதைகளின் முளைப்பு திறனை கட்டாயம் உறுதி செய்த பின்னர் மட்டுமே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும் என தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்துக்குட்பட்ட 22 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலையங்களில், 11 எண்ணிக்கையிலான விதை குவியல்களில், ரூ. 6.63 லட்சம் மதிப்புள்ள 17.95 மெ.டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது விதை ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அகிலா, மணிமாறன், பாலையன், நவீன்சேவியர் மற்றும் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Oct 2022 10:08 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்