/* */

தேசிய ரத்ததான நாள்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரத்ததான முகாம்

2022-ம் வருடத்திற்கான முழக்கம் (Slogan) ஒற்றுமையுடன் இரத்த தானம் செய்வோம், ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம்.

HIGHLIGHTS

தேசிய ரத்ததான நாள்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரத்ததான முகாம்
X

 தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (07.12.2022) தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (07.12.2022) தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தேசிய தன்னார்வ இரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. 2022-ம் வருடத்திற்கான முழக்கம் (Slogan) ஒற்றுமையுடன் இரத்த தானம் செய்வோம், ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம். (Donating blood is an act of solidarity, Join the effort and save lives) என்பது முன் வைக்கப்பட்டுஇரத்த தான முகாம் மற்றும் இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 4 அரசு இரத்த மையங்கள் உள்ளன. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை - கும்பகோணம், அரசு மருத்துவமனை - பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது.

4 அரசு இரத்த மையங்களில் 2021-22ம் ஆண்டில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10701 யூனிட், அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனையில் 6767 யூனிட், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கும்பகோணத்தில் 2774 யூனிட் மற்றும் அரசு மருத்துவமனை - பட்டுக்கோட்டையில் 1912 யூனிட் ரத்தம் ஆக மொத்தம் 22154 யூனிட் ரத்தம் கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

மேலும்,2021-22ம் ஆண்டில் அரசு இரத்த மையங்களுக்கு இரத்த தான முகாம் நடத்தி கொடுத்த 69 இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இரத்த தானம் ஒரு வருடத்தில் 3 முறை தனி நபர் வழங்கலாம் என்ற விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த்., தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. பாலாஜி நாதன், மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர் அருள் மேரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மரு. வேல்முருகன், மற்றும் மருத்துவர்கள் மரு. வரதராஜன், மரு.ராதிகா மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!