/* */

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் பேரணி

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சையில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் பேரணி
X

கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையல் விவசாயிகள் பேரணி நடத்தினர்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடகாவில் காங்கிரசாரின் பாதயாத்திரையையும், ஆர்ப்பாட்டத்தையும் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நீதி கேட்டு நடக்கும் பேரணி தஞ்சை வந்தது.

மத்திய அரசு, கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும், மேகதாது அணைக்காண திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மேகதாது பகுதியை முற்றுகையடுவதற்காக திருவாரூர் தேரடியில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி மன்னார்குடி வழியாக தஞ்சை வந்தடைந்தது. தொடர்ந்து திருச்சி, நாமக்கல், சேலம் வழியாக ஓசூர் செல்கின்றனர். இன்று ஓசூரில் இருந்து ஜூவாடி வழியாக மேகதாது பகுதிக்கு சென்று அங்கு தமிழக விவசாயிகளுக்கு நீதிகேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக தஞ்சை வந்த அவர்கள் தஞ்சை ஆற்றுப் பாலத்தில் இருந்து சோழன் சிலை வரை பேரணியாக சென்றனர்.

Updated On: 19 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?