/* */

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

private sector employment camp

HIGHLIGHTS

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்  தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்
X

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கே.எஸ்.கே.பொறியியலில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில்  பணி நியமன ஆணை பெற்ற இளைஞர்களுடன் அமைச்சர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கே.எஸ்.கே.பொறியியலில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகியோ ர்முன்னிலையில் வழங்கினர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுக்கிணங்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கே. எஸ். கே.பொறியியலில் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இம்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை. திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்களான TVR Enterprises. TVS Training அண்ட் Services> Zencorp Techno Solutions> ITC Limited>Neel Metal Productions> தாமரை International ஸ்கூல் போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட தனியார்துறைநிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவை கலந்தகொண்டன.

இம்முகாமில் 18வயது முதல் 40 வரை உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர். டிப்ளமோ, ஐடிஐ,பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என 4300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டதில்ரூபவ் 714 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 416 நபர்கள் இரண்டாம்கட்ட தேர்விற்கும் 64 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபத்ரா, சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன்(கும்பகோணம்) துரைசந்திரசேகரன்(திருவையாறு), கும்பகோணம் மாநகராட்சி மேயர் .க.சரவணன், துணைமேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் ம.செந்தில், முருகன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, மண்டல இணை இயக்குனர் சந்திரன், உதவி இயக்குநர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம்) வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்)ரமேஷ்குமார். ஒன்றியக் குழுத் தலைவர் மதி.காயத்ரிஅசோக்குமார், கே.எஸ்.கே. பொறியியல் கல்லூரி தலைவர் கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Jun 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  4. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  5. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  6. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  8. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  10. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!