தஞ்சையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி

Innovative training for veterinary assistants doctors in Tanjore

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பினை கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாராம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. 20 ஆவது கால்நடை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 1 கோடி பசுவினங்களும். 5 இலட்சம் எருமையினங்களும், 1,43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும், 13 கோடி கோழியினங்களும் உள்ளன. கிராமப்புற ஏழை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது.

தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகள் கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதின் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும். கிராமிய பொருளாதாரத்தை உயர்த்தவும் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது 3030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் இந்த பணியிடங்களில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பபடாமல் இருந்த நிலையில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலாலும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் தொடர் முயற்சியிலும் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, 1089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை வகைப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கும் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர். திருவாரூர். நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 141 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது என்று அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி.சு.ஜவஹர் தெரிவித்தார்

Updated On: 24 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 2. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 3. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 4. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
 7. ஈரோடு
  அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
 8. தமிழ்நாடு
  திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?
 9. குமாரபாளையம்
  அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
 10. குமாரபாளையம்
  பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன்...