/* */

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால இலவசப் பயிற்சி முகாம்

இல்லம் தேடிக்கல்வி, பள்ளியில் பயிலும் 13 வயதுக்குள்பட்ட மாணவ மாணவியருக்கு மே 14 முதல் 18 வரை பயிற்சியளிக்கப்படுகிறது

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால இலவசப் பயிற்சி முகாம்
X

பைல் படம்

இல்லம் தேடிக்கல்வி மற்றும் பள்ளியில் பயிலும் 13 வயதுக்குள்பட்ட மாணவ / மாணவியர் தங்கள் கோடை விடுமுறைப் பயனுள்ள வழி செலவிடத் தக்க வகையில், தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால இலவசப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14.05:2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 18:03:2023 வியாழக்கிழமை வரை நாள் தோறும் காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில், அழகிய கையெழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி முதனமைவ இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும் பல்லாங்குழி, சொக்கட்டான், ஆடு புலி ஆட்டம், பம்பரம் விடுதல், சிலம்பாட்டம், செஸ், சுண்டாட்டம்(Carrom Board) குதியாட்டம்( ஸ்கிப்பிங்) முதலான விளையாட்டுகள் நடைபெற உள்ளன. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பெயர், வயது. படிக்கும் வகுப்பு முதலான விவரங்களைத் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில், நூலகரிடம் நேரிலோ அல்லது 99764 27038, 94448 60511 ஆகிய புலன (வாட்ஸ் ஆப்) எண்களிலோ, பதிவு செய்து கொள்ளலாம்.

பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பெயர்களைப் பதிவு செய்யக் கடைசி நாள் 12.05:2023 மாலை 05:00 மணி என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

14:05:2023 காலை 09.00-12.00 மணி வரை நூலக வாசிப்பு.

15:05:2023 காலை 9:00 - 10:00 மணி வரை வண்ணம் தீட்டுதல்.

15.05.2023 காலை 10.30-11.30 மணி வரை சதுரங்கம்/ ஸ்கிப்பிங்.

15:05:2023 காலை 11:30-12:00 நூலக வாசிப்பு.

16.05.2023 காலை 09.00-10.00 மணி வரை அழகிய கையெழுத்து போட்டி.

16:05.2023 காலை 10.00-11.00 கேரம் பலகை/ பல்லாங்கழி! ஆடுபுலி ஆட்டம்.

17.05.2023 காலை 09.00-10.00 மணி வரை சிலம்பம்.

17.05.2023 காலை 10.00-11.00 மணி வரை கதை சொல்லல் ஓவியம்.

18.05.2023 காலை 09.00-10.30 மணி வரை கோலட்டம் கும்மி

18.05.2023 காலை 11.00 மணிக்கு மேல் நிறைவு விழா(சான்றிதழ் வழங்கல்)

Updated On: 11 May 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை