தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டிதேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும். மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி நடக்கிறது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக  போட்டிதேர்வு எழுதுவோருக்கு  இலவச பயிற்சி
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும்தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாகபோட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படு கின்றன.

தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) காவல்துறையில் காலியாக உள்ள 615 சார்பு ஆய்வாளர் (தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு: 01.07.2023 அன்று 20 வயது: முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இத்தேர்விற்கு 01.06.2023 முதல் 30.06.2023 வரை www.thusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது;

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும். மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 16.05.2023 செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை. தேர்விற்கான பாடத்திட்டம் . தேர்விற்கு தயார் செய்யும் விதம், பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே போட்டித்தேர்வெழுதும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 04362-237037. என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 12 May 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.06) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
  4. ஈரோடு
    அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி: மாற்றுத்திறனாளி...
  5. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  7. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  8. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  9. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  10. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை