/* */

வெள்ளத்தில் மூழ்கியதால் அழுகிய நாற்றுகளை அப்புறப்படுத்தி வரும் விவசாயிகள்

மழைநீர் வடிந்து அழுகிய நாற்றுகளை தரம் பிரித்து, மீண்டு நாற்று நட்டு சாகுபடி செய்தாலும் மகசூல் கிடைப்பது சந்தேகம்தான்

HIGHLIGHTS

வெள்ளத்தில் மூழ்கியதால் அழுகிய நாற்றுகளை அப்புறப்படுத்தி வரும் விவசாயிகள்
X

மழையால் அழுகி போய், விளைநிலங்களில் மிதக்கும் நாற்றுகளை சாலையோரங்களில் தூக்கி எறியும் விவசாயிகள்.

மழையால் அழுகி போய், விளைநிலங்களில் மிதக்கும் நாற்றுகளை சாலைகளில் தூக்கி எறியும் விவசாயிகள். மாவட்டந்தோறும் நாற்று தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலைக்கு நாற்று வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, சுமார் 25,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ராமபுரம், திட்டை, அம்மாப்பேட்டை, உக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டும், விளைநிலங்களில் மழை நீர் வடியாததால், நாற்று பயிர்கள் அழுகி நீரில் மிதக்கின்றன, இதனை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து திட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், நல்ல தரமான விதை நெல், நாற்று வாங்கி ஏக்கருக்கு 25,000க்கு மேல் செலவு செய்து சாகுபடி மேற்க்கொண்டோம்.

ஆனால் நாற்று நட்டு இருபது நாட்களில் கடுமையான மழை காரணமாக நாற்றுகள் அனைத்தும் நீரில் மூழ்கின, முறையாக வடிகால் வாய்கால்கள் தூர்வாராததால், மழை விட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை விளைநிலங்களில் மழை நீர் வடியாததால், பயிர்கள் அழுகி நீரில் மிதக்கின்றன. அதனால் அழுகிய நாற்றுகளை தூக்கி எறிந்து வருவதாகவும் கூறும் விவசாயிகள், தற்போது மாவட்டம் முழுவதும் நாற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இனிமேல் மழைநீர் வடிந்து அழுகிய நாற்றுகளை தரம் பிரித்து, மீண்டு நாற்று நட்டு சாகுபடி செய்தாலும், உரிய மகசூல் கிடைப்பது சந்தேகம் தான், ஏன்னென்றால் பருவம் தவறி சாகுபடி செய்தால் மகசூல் கிடைப்பது கடினம் என்கின்றனர். ஏற்கெனவே ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்துள்ளோம், தற்போது மேலும் புதிதாக நாற்று நற்று, புதிதாக உரம் தெளிக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆனால் தமிழக அரசு இழப்பீடாக 8,000 அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை, எனவே ஏக்கருக்கு 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Updated On: 25 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?