/* */

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்தல், நீக்கம் மற்றும் திருத்த சிறப்பு முகாம்கள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசிஎண், இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6 பி -ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்தல், நீக்கம்  மற்றும் திருத்த  சிறப்பு முகாம்கள்
X

பைல் படம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான கடந்த 09.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வருகிற 26.12.2022 வரை வைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 12.11.2022 மற்றும் 13.11.2022 அன்று நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களைத் தொடர்ந்து பொது மக்களின் வசதிக்காக எதிர்வரும் 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களிலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு முகாமில் 01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 01.01.2005 அன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ அருகாமையிலுள்ள வாக்குச் சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 -ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலிலுள்ள அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய, காணாமல் போன வாக்காளர் அட்டைக்குப் பதிலாக மாற்று அட்டைபெற படிவம் 8 -ஐ பூர்த்தி செய்தும், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசி எண், இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6பி -ஐ பூர்த்தி செய்தும், இச்சிறப்பு முகாமில் வழங்கலாம்.

பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும், அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை படிவம் 6, 7, 8, 6B னை பூர்த்தி செய்து வழங்கலாம் . பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, பிழை திருத்தம் மேற்கொள்ள வருடம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவில் விண்ணப்பிக்கலாம்.

மேலும்இ 17வயது பூர்த்தியடைந்தவர்கள் அடுத்து வரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதி நாளில் ( அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ) தொடர்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயதினை பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களார் பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்கள் வழங்கலாம்.

மேலும், நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voters Help Line என்ற Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்கள் அறிய, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இச்சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்று எதிர்வரும் 05.01.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Updated On: 25 Nov 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்