/* */

ஓராண்டில் திமுக பாஸ் மார்க் வாங்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சி கடந்த ஓராண்டில் பாஸ் மார்க் வாங்காமல் தோல்வியை சந்தித்துள்ளது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

HIGHLIGHTS

ஓராண்டில் திமுக பாஸ் மார்க் வாங்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
X

களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், காயமடைந்தவர்களையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாகுபாடின்றி விசாரணை நடத்த வேண்டும். ஓராண்டில் இந்த ஆட்சி பாஸ்மார்க் ஆகவில்லை என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், காயமடைந்தவர்களையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், களிமேடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அக்குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிமுக 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தியது. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை இப்போதைய திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஓராண்டு காலத்தில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. நீண்டகால, குறுகியகால சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும் என்பது இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர். மொத்தத்தில் இந்த ஆட்சி கடந்த ஓராண்டில் பாஸ் மார்க் வாங்காமல் தோல்வியைச் சந்தித்துள்ளது என்றார். இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 7 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்