/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சித் தலைவர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகளைமாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சித் தலைவர் ஆய்வு
X

பட்டுக்கோட்டையில் ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் தேரப்பநாயகம் கிராமம் அருகே கல்லணை கால்வாயில் புனரமைக்கும் பணிநடைபெற்று வருவதை பார்வையிட்டு, சிவாவிடுதி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தரமாகஉள்ளதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவமாணவியர்களின் குழந்தைகளுக்குவழங்கப்படும் சத்துணவுதரம் குறித்தும் பள்ளிகட்டிடங்கள் பாதுகாப்புகுறித்தும் கழிப்பறைவசதிமற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது. பணிகொண்டான் விடுதி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலைஅமைக்கும் பணிநடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் சிலாவிடுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிநடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வுசெய்து, பட்டுக்கோட்டை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு குறிப்பாக கூட்டு துப்பரவு பணி இரண்டு வார்டுகளுக்கு நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, குப்பைக் கிடங்குகளில் நடைபெற்றுவரும் பணிகளும் ஆய்வுசெய்யப்பட்டு பட்டுக்கோட்டை நகராட்சி குப்பைகள் தேங்காத வண்ணம் அனைத்து குப்பைகளும் சேகரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் புனவாசல் ஊராட்சியில் இளந்தென்றல் மாற்றுத்திறனாளி குழு உறுப்பினர்களுக்குதையல் பயிற்சி வழங்குவதைப் பார்வையிட்டு ஆய்வுசெய்து மேற்கண்டபணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து திருவோணம் வட்டாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழாய் கிணற்றினை திறந்து வைத்து, இக்குழாய் கிணறு மூலம் சுமார் 10 ஏக்கர் பரப்பில் 16 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, பட்டுக்கோட்டைவருவாய் கோட்டாட்சியர் ஐவண்ணன் (பொறுப்பு) பட்டுக்கோட்டை நகராட்சிஆணையர் சுப்பையா, வட்டாட்சியர்கள் சீமான் (ஒரத்தநாடு), கணேசன் (பட்டுக்கோட்டை) கணேஸ்வரன் (பேராவூரணி)மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

Updated On: 13 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  2. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  7. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  8. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  9. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  10. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!