/* */

என் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

என் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
X

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். 

மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், என் பெயரை பயன்படுத்தி சிலர் தொலைபேசி வழியாக அழைத்து வருகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டு காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர், பெயரினை பயன்படுத்தி ஏதேனும் அழைப்புகள் வந்தால் எவரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

அவ்வாறு வரும் அழைப்புகள் குறித்து உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரிடையாக தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரை தவறாக பயன்படுத்தி அவர்களின் நேர்மைக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 July 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?