சமூக சேவை செய்தவர்களுக்கான முதல்வர் விருது: பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் விருதுகள் என்ற இணைய தளத்தில் 10.6.2023 க்குள் பதிவு செய்து விண்ணப் பிக்கலாம்
HIGHLIGHTS

சமூக நலம் மகளிர் நலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனத்துக்கும், பெண்களுக்கான சிறப்பான பணிகளைச் செய்த சிறந்த சமூக சேவகர்களுக்கும் 2023 ம் நிதியாண்டில் சுதந்திரதினவிழாவின் போது தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் விருது பெறுவதற்கு தகுதியான சிறந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறந்த சமூக சேவகர்களிடமிருந்து கீழ்காணும் விவரப்படி இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேவை தொண்டு: மேற்படி விருதினை பெறுவதற்கு சிறந்த சமூக நிறுவனம் மற்றும் சமூக சேவகர்களுக்கு உரிய தகுதிகளாக, தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை. மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும், சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் . பெண்களின் முன்னேற்றத் திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களுக்கு இருத்தல் வேண்டும். தனிநபர் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கு தமிழக அரசின் விருதுகள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில 10.06.2023 க்குள் பதிவு செய்து விண்ணப் பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியரகத்தில் 3 வது தளம், அறை எண் 303, மாவட்ட சமூக நல் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளுமாறும், 04362 264505 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.