பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை: விருது பெற விண்ணப்பிக்கலாம்

Better service for the advancement of women: Individual companies can apply

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை: விருது பெற விண்ணப்பிக்கலாம்
X

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

சமூக நலம் - மகளிர் நலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனத்துக்கும், பெண்களுக்கான சிறப்பான பணிகளைச் செய்த சிறந்த சமூக சேவர்களுக்கும் 2022-2023 ஆம் நிதியாண்டினல் சுதந்திர தினவிழாவின் போது தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும்.விருதுபெறுவதற்கு தகுதியான சிறந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறந்த சமூக சேவகர்களிடமிருந்து கீழ்க்காணும் விவரப்படி இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி விருதினை பெறுவதற்கு சிறந்த சமூகசேவை நிறுவனம் மற்றும் சமூக சேவகர்களுக்கு உரிய தகுதிகளாக, தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும்,குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள்.பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை,மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றி யவராகவும், சமூக சேவை நிறுவனம் அரசுஅங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களும் இருத்தல் வேண்டும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்க்கு தமிழக அரசின் விருதுகள் என்ற இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவு செய்துவிண்ணப்பிக்கும் படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு புதிய மாவட்டஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூகநல அலுவலகம், 3 -ஆவது தளம், அறை எண்:303 (தொலை பேசி எண். 04362-264505) தஞ்சாவூர் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 23 Jun 2022 2:45 PM GMT

Related News