தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை துறைகளுக்கு வங்கி கடன் ரூ. 9467 கோடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை துறைகளுக்கு வங்கி கடன் ரூ. 9467 கோடிக்கான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை துறைகளுக்கு வங்கி கடன் ரூ. 9467 கோடி
X

தஞ்சாவூர் மாவட்ட கடன்  திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை துறைகளுக்கு வங்கி கடன் ரூ. 9467.42 கோடியாக அளவிடப்பட்டுள்ளது என்று நபார்டு வங்கி தயாரித்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டு பேசினார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ரிசர்வ் வங்கி அலுவலர் வெங்கடேசன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாலமுருகன், தஞ்சை ஐஓபி மண்டல மேலாளர் சங்கீதா, ஐஓபி முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், ஐ.ஓ.பி. அலுவலர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டு திட்ட பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், நபார்டு வங்கி ஆண்டு தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வருகிறது. இதன்படி 2022-23 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை துறைகளுக்கு வங்கி கடன் ரூ. 9467.42 கோடியாக அளவிடப்பட்டுள்ளது.

மேலும் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு என்பது இயற்கையில் பலதரப்பட்ட செயல்கள் உள்ள ஒரு விஷயமாக உள்ளது. இதற்கு அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. மாவட்டத்தில் வங்கியாளர்கள், அரசு துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் திட்ட ஆவணத்தில் மதிப்பிடப்பட்ட கடன் திறனை அடைப்பதற்கும், அதன் மூலம் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் மூலதன உருவாக்குவதை அடைவதற்கும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை மீண்டும் கட்டியெழுப்ப முன்னோடி வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வங்கியாளர்கள் முயற்சிக்க வேண்டும். மேலும் ஏழை மக்களின் சிறு தொழில், வீட்டு கடன் போன்றவற்றை விரைந்து தரவேண்டும். மாவட்டத்திற்கான கடந்த கால வரையறை திட்டமாக இருப்பதால் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை அடைவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு காலாண்டு கடன் சாதனைகளை மாவட்ட அளவில் கூட்டங்களில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றார்.

Updated On: 14 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா