/* */

அம்மாபேட்டைபேரூராட்சியில் புதியபேருந்து நிலையம் திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்

HIGHLIGHTS

அம்மாபேட்டைபேரூராட்சியில்  புதியபேருந்து நிலையம் திறப்பு விழா
X

 அம்மாபேட்டைதேர்வு நிலை பேரூராட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு விழா  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டைதேர்வு நிலை பேரூராட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் அரசுநலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அரசு தலைமை கொறடா முனைவர். கோவி.செழியன் பேரூராட்சி ஆணையர் ஆ.செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க,தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்மாபேட்டைபேரூராட்சியில் 2018-2019 ஆம் ஆண்டு மூலதனமானிய திட்டத்தின் கீழ் ரூ.300.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்துநிலைய ம்மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இப்பேருந்துநிலையம் 2018-19 ஆம் ஆண்டு தமிழகஅரசின் மூலதனமானியநிதி ரூ.264.00 லட்சம் மற்றும் பேரூராட்சி பங்குதொகை ரூ.36.00 லட்சம் ஆக கூடுதல் ரூ.300.00 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாடு செய்யப்பட்டுள்ள புதியபேருந்து நிலையத்தினுள் 10 பேருந்து நிறுத்தங்கள், 17 கடைகள் உள்ளடங்கிய வணிகவாளகம், உணவகம், இரு சக்கரவாகன பாதுகாப்பகம், ஆண் பெண் இருபாலருக்கும் நவீனசுகாதார வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்,பெண் பயணிகள் காத்திருப்பு அறை, பேருந்து ஓடுதளம்,பயணிகள் நடைபாதை, பயணிகள் நிழற்குடை, பயணிகள் இருக்கைகள், எல்இடி மின்விளக்கு வசதி, உயர்மின் கோபுரவிளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 15 வதுநிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 17 கடைகள் 1 உணவகம் மற்றும் இரு சக்கரவாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் மூலமாகரூ.10.64 இலட்சமும், தினசரிவந்து செல்லும் பேருந்து நுழைவு கட்டணம் வசூல் மூலமாகரூ.3.45 இலட்சம் ஆக கூடுதல் 14.09 இலட்சம் ஆண்டு ஒன்றுக்கு வருவாய் கிடைக்கும்.

மேலும், அம்மாபேட்டை தேர்வுநிலை பேரூராட்சி தனிநபர் கழிவறை கட்டும் 10பயனாளிகளுக்கு தலா ரூபாய் 9,334 அரசுமானியமும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 2,10,000 அரசு மானியமும், சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 9 நபர்களுக்கு விதவைஉதவித் தொகையும், 1 நபருக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகையும்,குடிமைப் பொருள் வழங்கல் துறைசார்பில் 10 குடும்பங்களுக்கு புதியகுடும்ப அட்டைகளும்,ஊரகவளர்ச்சித் துறை சார்பில் 17 சுய உதவிக் குழுகளுக்கு சமுதாய முதலீட்டு நிதியும்,4 குழு கூட்டமைப்புக்கு வங்கிக் கடன்களும், கருணை அடிப்படையில் 1நபருக்கு பணிநியமன ஆணைய உள்பட மொத்தம் 66 பயனாளிகளுக்கு ரூபாய் 3,37,62,340 கோடிமதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சி 15 வது -நிதிக்குழுமானியத்தின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் பெரியண்ணன் நகர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இவ்விழாவில் பாராளுமன்றமேலவைஉறுப்பினர் சு .கல்யாணசுந்தரம்,மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), கஅன்பழகன் (கும்பகோணம்), எம் .எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), கூடுதல் ஆட்சியர் வருவாய் என்.ஓ.சுகபுத்ரா ,மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாகந்தபுணணி , மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர் உஷா புண்ணியமூர்த்தி, கும்பகோணம் மாநகராட்சி துணைமேயர் சு.ப.தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.கே.முத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கோ.கனகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.வி.கலைச்செல்வன், அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இரா.இராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Dec 2022 10:45 AM GMT

Related News