/* */

பிஜேபி ஆட்சியை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயண பிரசார இயக்கம்

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பிஜேபி ஆட்சியை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரசார இயக்கம் நடந்தது

HIGHLIGHTS

பிஜேபி ஆட்சியை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடைபயண பிரசார இயக்கம்
X

 தஞ்சாவூர் பூச்சந்தை அருகில் துவங்கிய நடை பயண பிரச்சார இயக்கம் இரண்டாவது நாளாக தஞ்சை மாநகரத்தில் நடைபெற்றது .

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பிஜேபி ஆட்சியை அகற்றுவோம்! நாட்டின் ஒருமைப்பாட்டை , மத நல்லிணத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

தஞ்சையில் இரண்டாவது நாளாக நடைபெற்றநாடு தழுவிய பிரச்சார இயக்கம் மே 5 -ஆம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், ஒன்றியங்கள், கிராமங்கள் வரை நடைபெற்று வருகிறது.

இந்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காலை 9 மணிக்கு தஞ்சாவூர் பூச்சந்தை அருகில் துவங்கிய நடை பயண பிரச்சார இயக்கம் 10.05.2023 இரண்டாவது நாளாக தஞ்சை மாநகரத்தில் நடைபெற்றது .

மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர் தலைமை வகித்தார். தஞ்சாவூர் பள்ளியக்ரகாரத்தில் துவங்கிய பிரச்சார இயக்கம் கரந்தை, வடக்குவீதி, நிக்கல்சன் வங்கி,பழைய பேருந்து நிலையம், தொல்காப்பியர் சதுக்கம்,இரயில்டி, கீழவாசல், பனகல் கட்டிடம் ஆகிய பகுதிகளைக் தொடர்ந்து இரவு 8 மணியளவில் காவேரி சிறப்பங்காடி அருகில் நிறைவு பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி இரண்டாம் நாள் பிரசார இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் பிரச்சார இயக்கத்தை முடித்து வைத்து உரையாற்றினார். இரண்டாம் நாள் இயக்கத்தில் மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன், மாநகரத் துணைச் செயலாளர் ஆர் .பி. முத்துக்குமரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ம.விஜயலட்சுமி, ஆர்.கே.செல்வகுமார், மாநகர நிர்வாகிகள் கே.மூர்த்தி, கே.கல்யாணி, ஆசிரியர் சுந்தரமூர்த்தி, கே.மாரிமுத்து.

ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இரண்டு நாள் பிரசார இயக்கத்தை ஒருங்கிணைத்து வழிநடத்திய மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா நன்றி கூறினார்.

இயக்கத்தில் குடும்பத்திற்கு 15 லட்சம் கொடுக்கப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றப்படாதது, 450 ரூபாய்க்கு விற்ற சமையல் எரிவாயு தற்போது 1200 ரூபாயக உயர்ந்துள்ளது, ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதி.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய உணவு பண்டங்கள் விலை உயர்வு, பெண்ணடிமை, ஆண்டான் அடிமை முறையை மீண்டும் கொண்டு வருகிற சனாதன தர்மம், மனுநீதியை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கை, விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படாதது.

ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்யாதது, போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை சுருக்கியது, 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 28% ஆக உயர்த்தி மக்களை துன்பத்திற்கு உள்ளாகியது, 50 லட்சம் கோடியாக இருந்த வெளிநாட்டு கடன் தற்போது 150 லட்சமாக கோடியாக உயர்ந்து நாட்டை திவாலாக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றது.

11 முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்தது, நாட்டின் இயற்கை வளம், கனிம வளங்களை கார்ப்பரேட் டுகள் கொள்ளை அடிக்க தாராள அனுமதி வழங்கியது,. மருத்துவம் , சுகாதாரத்தை வணிகமயமாக்கியது, மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சேவை நிறுவனங்களான துறைமுகங்கள்,. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்கள் ,ரயில் நிலையங்கள்,. அணு ஆயுத தொழிற்சாலை கள், வங்கி , மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட மத்திய,. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானி, அம்பானிகளிடம் தாரை வார்த்தது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள் அனைத்து பகுதி மக்களிடமும் வழங்கப்பட்டது.

Updated On: 11 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...