/* */

பாலம் இன்றி இடுப்பளவு தண்ணீரில் இறுதிச் சடங்கிற்கு தூக்கிச்சென்ற சடலம்

பேராவூரணி அருகே பாலம் இன்றி இடுப்பளவு தண்ணீரில் இறுதிச் சடங்கிற்கு சடலத்தை மக்கள் தூக்கிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாலம் இன்றி இடுப்பளவு தண்ணீரில் இறுதிச் சடங்கிற்கு தூக்கிச்சென்ற சடலம்
X

பேராவூரணி அருகே இடுப்பளவு தண்ணீரில் சடலைத்தை சுமந்து செல்லும் மக்கள்.

பேராவூரணி அருகேயுள்ள வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடலை எரிப்பதற்கு மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் இருந்து முடச்சிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கான மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கல்லணை கால்வாயின் கிளை பாசன வாய்க்கால் உள்ளது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாய்க்காலில் பாலம் இல்லாததால் சடலத்துடன் உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி அதனை கடந்து மறுபுறம் சென்று மகாலிங்கம் உடலுக்கு இறுதி நிகழ்ச்சிகள் செய்தனர். வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும்போது தொடர்ந்து இதுபோல் இன்னல்கள் ஏற்படுவதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 14 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்